• டிகேபுரம் பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் பாலாற்று நீரில் மூழ்கி பலி.

·         டிகேபுரம் பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் பாலாற்று நீரில் மூழ்கி பலி.

     வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையாம் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் தேவி. இவரின் மகன் யுவராஜ் (21). தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

     இந்த நிலையில் விடுமுறை என்பதால் யுவராஜ் சேண்பாக்கம் அடுத்த தண்டலம் கிருஷ்ணாபுரம் (டி.கே.புரம்) பாலாற்றில் நண்பர்களுடன் நீரில் குளிக்க சென்று குளித்து கொண்டிருந்தபோது பாலாற்றில் அதிக அளவு மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் சேற்றில் சிக்கி யுவராஜ் அங்கேயே பரிதாபமாக பலியானார். பொதுமக்கள் சேர்ந்து உடலை மீட்டனர்.

     அப்போது டிகேபுரம் கிராம மக்கள் இதுவரையில் இது போன்று அதிக அளவு பாலாற்றில் மணல் எடுத்ததால் பள்ளத்தில் சிக்கி இதுவரையில் 3 பேர் பலியானதாக கூறி மணல் லாரியை சிறை பிடித்ததுடன் மேலும் யுவராஜின் உடலை கொண்டு செல்ல வந்த ஆம்புலன்சையும் சிறை பிடித்து டி.கே.புரம் கிராம மக்கள் மணல் லாரி மற்றும் ஆம்புலன்ஸ் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

     தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த விருதம்பட்டு காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடிக்கடி உயிரிழப்புகள் நிகழ காரணம் பாலாற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதே என கூறும் மக்கள் உயிரிழப்புகளை தடுக்க பாலாற்றில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.