• கொணவட்டம் தேவி நகரில் நீர் நிலை ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் மாற்று இடம்.
வேலூர் மாவட்டம், கொணவட்டம் அடுத்த தேவி நகரில் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில் சுமார் 80 ஆண்டுகளாக 42 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதற்கு வீட்டு வரி, மின் இணைப்பு, குழாய்கள் இணைப்பும் உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் நாங்கள் அனைவரும் தினசரி கூலி வேலை, பீடி வேலை, சுமை தூக்கும்தொ ழில் செய்தும் பிழைப்பை நடத்தி வருகிறோம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், நகரத்திற்கு மிக அருகிலும் இத்தனை ஆண்டு கா லம் நாங்கள் வசித்து வந்ததால், தற்போ து இப்பகுதியை பொ துப்பணி துறையின் நீர்வளத் துறை பிரிவினர், இது ஆக்கிரமிப்பு என கூறி இவைகளை அகற்ற உள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
எனவே சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த எங்களின் பிள்ளைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கிறார்கள். எனவே எங்களுக்கு வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கபடுவதாலும், எங்களுக்கு வேறு எங்கும் வீடு இல்லை என்பதாலும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் எங்களுக்கு மாற்று இடத்தை ஒதுக்கி தந்தால் ஏழை எளிய மக்களான எங்களுக்கு அது பெரிதும் உதவும். எனவே தாங்கள் கூறும் இடத்தை நாங்கள் வளர்ச்சி பணிகளுக்காக வழங்குவதில் எங்களுக்கு எந்த தடை யுமில்லை. எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கியோ அல்லது அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டி வழங்கப்படும் வீடுகளிலோ எங்களின் 42 குடும்பங்களுக்கும் ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
பேட்டி: ஷோபனா (பகுதியை சேர்ந்தவர்).
Comments
Post a Comment