• பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு.

 ·        அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு.

வேலூர் மாவட்டம், அணைகட்டு ஊராட்சி ஒன்றியம், பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இன்று (27.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் மருந்தகங்களில் பார்வையிட்டு மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அரசு யுனானி மருத்துவ சிகிச்சை  பிரிவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவரிடம் பொதுமக்களுக்கு எந்த வகையான  நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவரிடம் கேட்டறிந்தார். மருத்துவர் வாதநோய், மூலநோய், தோல்நோய், ஆஸ்துமா, பக்கவாதம், சர்க்கரை, இரத்த அழுத்த நோய்கள், மாதவிடாய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பின்னர் பிரசவ அறையில் பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களிடம்  தடுப்பூசிகளை உரிய தேதியில்  சுகாதார நிலையத்தில் மருத்துவரை அணுகி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார்.  

இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, அரசு மருத்துவர்கள் மரு. ஷாலினி, மரு. சௌமியா, மரு. சித்தார்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.