Posts

Showing posts from September, 2024

• விளையாட்டு சங்கங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

Image
·          விளையாட்டு சங்கங்களை தமிழக ஒலிம்பிக் சங்கமும் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் ஒழுங்குப்படுத்த வேண்டும் குத்து சண்டை வீரர் சங்க மாநில பொதுசெயலாளர் பிருத்திவிராஜ் வேலூரில் பேட்டி .         வேலூர் மாவட்டம் , வேலூரில் தமிழ்நாடு மாநில குத்து சண்டை சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் ரீகன் உள்ளிட்ட திரளான குத்து சண்டை வீரர்களும் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.          பின்னர் மாநில குத்து சண்டை சங்க மாநில பொதுசெயலாளர் பிருத்திவிராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை நியமித்தோம். எங்களின் நோக்கம் வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும் , வகையில் அவர்களுக்கு நாங்கள் இலவச பயிற்சியை அளிக்கிறோம். மேலும் ...

• புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை.

Image
  ·          புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய ஆலயத்தில் வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து மகாதீபாராதனை. ·          திருப்பதி லட்டை வேலூர் நடைபயிற்சி செய்வோர் சங்கம் மொத்தம் பணம் கொடுத்து வாங்கி இலவசமாக பக்தர்களுக்கு வழங்கினர் -பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில்   நின்று வாங்கி சென்றனர்       வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு மலர்மாலை துளசி மாலைகளால் அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.       பின்னர் வேலூர் நடைபயிற்சி செய்வோர் சங்கம் சார்பில் குருவாயூர் சம்பத் தலைமையில் மொத்த திருப்பதி லட்டுகளையும் ப...

• தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்.

Image
·         தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகா ம் – வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சேக்கானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம் , கண் மருத்துவம் , பல் பரிசோதனை , யுனானி மருத்துவம் , ரத்த அழுத்த பரிசோதனை , எடை உயரம் எடுத்தல் , ஆய்வக சேவைகள் , HB RBS, HIV, HBSAG போன்ற மருத்துவ சேவைக ளில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை   செய்யப்பட்டது.   மாவட்ட ஆட்சித் தலைவர் இம்முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளை செய்வதை பார்வையிட்டார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை எந்த மாத்திரைகள் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என தெளிவாக எடுத்து கூறுமாறு செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். இ ம்முகாமில்   சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் TT தடுப்பூ...

• வேலூர் கோட்டை மைதானத்தில் “வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழா.”

Image
·         வேலூர் கோட்டை மைதானத்தில் “வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழா”- வை முரசு கொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர்   தொடங்கி வைத்தார்.            வேலூர் கோட்டை மைதானத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முரசு கொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தொடங்கி வைத்தார். தொடக்க   நிகழ்ச்சியில், மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் திரைப்பட புகழ் கிராமிய நடன இயக்குநர் திருவண்ணாமலை பே.சு.ஜே.கே.ஜெயக்குமார் நடன ஒருங்கிணைப்பில் 75 கலைஞர்கள் இணைந்து வழங்கும் காவியாட்டம், புரவியாட்டம்,   புலியாட்டம், பன்முகப்பறை, பம்பை , கை சிலம்பாட்டம் ஆகியவற்றுவுடன் இசை   நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் குருமன்ஸ் சேவையாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பெரிய மேளம், தெருக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆகிய   கலை நிகழ்ச்சிகள்   தொடர்ந்து நடைபெற்றது . அதை தொடர்ந்து கலை பண்பாட்டு துறை சார்பில் குரலிசைப் பிரிவு, கருவியிசைப் பிரிவு, பரதநாட்டியப் பிரிவு, கிராமியக...

• புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள் ரூ.9,000 கோடி முதலீடு.

Image
·         புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் , முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை ம...