• தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்.
· தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் – வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சேக்கானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் பரிசோதனை, யுனானி மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, எடை உயரம் எடுத்தல், ஆய்வக சேவைகள், HB RBS, HIV, HBSAG போன்ற மருத்துவ சேவைகளில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் இம்முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளை செய்வதை பார்வையிட்டார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை எந்த மாத்திரைகள் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என தெளிவாக எடுத்து கூறுமாறு செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் TT தடுப்பூசி போடப்பட்டது. 10 தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, முதல் உதவி பெட்டகங்களை வழங்கினார்.
இம்முகாமில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, மருத்துவர்கள் மரு.சக்தி ஜனனி, மரு. சரண்யா, மரு. திலீப்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆரோக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் பிரவீன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment