• வேலூர் கோட்டை மைதானத்தில் “வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழா.”
· வேலூர் கோட்டை மைதானத்தில் “வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழா”- வை முரசு கொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முரசு கொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில், மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் திரைப்பட புகழ் கிராமிய நடன இயக்குநர் திருவண்ணாமலை பே.சு.ஜே.கே.ஜெயக்குமார் நடன ஒருங்கிணைப்பில் 75 கலைஞர்கள் இணைந்து வழங்கும் காவியாட்டம், புரவியாட்டம், புலியாட்டம், பன்முகப்பறை, பம்பை , கை சிலம்பாட்டம் ஆகியவற்றுவுடன் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் குருமன்ஸ் சேவையாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பெரிய மேளம், தெருக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது .
அதை தொடர்ந்து கலை பண்பாட்டு துறை சார்பில் குரலிசைப் பிரிவு, கருவியிசைப் பிரிவு, பரதநாட்டியப் பிரிவு, கிராமியக் கலை பிரிவு, ஓவியப் பிரிவு ஆகிய ஐந்து பிரிவுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழையும் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஹேமநாதன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் நீலமேகன், வட்டாட்சியர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment