• விளையாட்டு சங்கங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

·         விளையாட்டு சங்கங்களை தமிழக ஒலிம்பிக் சங்கமும் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் ஒழுங்குப்படுத்த வேண்டும் குத்து சண்டை வீரர் சங்க மாநில பொதுசெயலாளர் பிருத்திவிராஜ் வேலூரில் பேட்டி.

      வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு மாநில குத்து சண்டை சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் ரீகன் உள்ளிட்ட திரளான குத்து சண்டை வீரர்களும் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

         பின்னர் மாநில குத்து சண்டை சங்க மாநில பொதுசெயலாளர் பிருத்திவிராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை நியமித்தோம். எங்களின் நோக்கம் வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும், வகையில் அவர்களுக்கு நாங்கள் இலவச பயிற்சியை அளிக்கிறோம். மேலும் நாங்கள் குத்து சண்டை வீரர்களையும் ஊக்குவித்து வருகிறோம். அரசாங்கம் உதவியை செய்ய வேண்டுமென எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும் தமிழக அரசு விளையாட்டுத் துறையும் பல விளையாட்டு சங்கங்கள் உள்ளது. போட்டிகளும் நடத்துகின்றனர். நாங்கள் அரசாங்கத்தை கேட்டால் சங்கங்கள் இரண்டாக உள்ளது என்கின்றனர். இதனை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கமும் தமிழக அரசும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும்தான் விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டும். போதிய கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டுமென கூறினார்.

 பேட்டி: பிருத்திவிராஜ் (குத்து சண்டை வீரர்கள் சங்க மாநில பொதுசெயலாளர்)

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.