• வேலூர்எம்.எல்.எ. ரூ.15 லட்சம் மதிப்பிலான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள்வழங்கினார்.
· கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ரூ.15 லட்சம் மதிப்பிலான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் சட்டமன்ற அலுவலகம் அருகில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் பரிசு பொருட்கள், அரிசி, நெய், சமையல் எண்ணெய், பிரியாணி செய்ய ரூ.200 ரொக்கப்பணம் போன்றவற்றை தனது தொகுதி கிறிஸ்தவ மக்கள் 1,547 பேருக்கு தனது சொந்த பணம் ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கினார். இதில் மேயர் சுஜாதா, முன்னாள் எம்.பி. முகமதுசகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் இந்த சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த பணத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட இந்து மக்களுக்கும், ரம்ஜானை கொண்டாட இஸ்லாமிய மக்களுக்கும், தொடர்ந்து பணம் பரிசு பொருட்களை வழங்கினார். இந்த ஆண்டுதான் கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நோக்கில் இதனை வழங்கினார். இதன் மூலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் பாகுபாடின்றி விழாக்களை கொண்டாட பொருட்கள் பணம் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment