• “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” வேலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
- “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வேலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய திட்டங்களில் ஒன்றான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட வட்டத்திற்குள்ளேயே தங்கி, அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைமனுக்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், சலமநத்தம் கிராமத்தில் உள்ள மாவட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துப்பாக்கி சுடும் மையத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும், அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்து குறித்தும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து மோத்தக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் கிராமம் அருகே மங்களுர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சந்தி கடவு எண் 109-ல் ரூ.63.61 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கான அணுகு வழி ஏற்படுத்துவது குறித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர், நில எடுப்பு வட்டாட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகின்ற 23.12.2024 அன்று அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வேலூர் மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 40, சாஸ்திரி நகர் பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் அல்லாபுரம் வ.உ.சி நகர் பகுதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 40, சாஸ்திரி நகர் 4 வது குறுக்கு தெருவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரின் இல்லத்திற்கு சென்று அவரின் உடல்நிலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை பணிகளை ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 52, கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார்.
வேலூர் கன்னிகாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, அங்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக 18.12.2024 அன்று A.A. மஹாலில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து துறை அலுவலர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மேற்கொண்ட ஆய்வுகளின் விவரங்கள் குறித்த கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்களிடமிருந்து 157 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி.உமா உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment