• வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆண் மயங்கி விழுந்து பலி


 ·         வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஆண் மயங்கி விழுந்து பலிகாவல் துறையினர் விசாரணை.

       வேலூரில் பழைய பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து அங்கேயே இறந்து கிடந்தார்.

            இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் அவரின் சட்டை பாக்கெட்டில் பார்த்தபோது அவர் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்துவரதன் என்பவரின் மகன் சதேஸ்குமார் (43) என்பது அவர் வைத்திருந்த ஓட்டுநர் உரிமைத்தை பார்த்து தெரிந்துகொண்டனர். பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.