• வேலுரில் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம்.
· வேலுரில் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கையில் நுகர்வோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவைகளை உடம்பு தேவைக்கு அதிகமாக எடுத்துகொள்ள கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த கூடாது. பொருட்களை வாங்கும் போது அதன் உற்பத்தி மற்றும் காலவதி தேதிகளை பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் பில் கேட்டு வாங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்த வண்ணம் சென்றனர். நுகர்வோர் விழிப்புணர்வுக்காக இந்த ஊர்வலமானது நடத்தப்பட்டது.
Comments
Post a Comment