• வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலய சனி மஹா பிரதோஷம்.
·
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர்
ஆலயத்தில்
சனி
மஹா
பிரதோஷம்.
· நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை, ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் முக்கிய பிரதோஷங்களில் ஒன்றான இந்த ஆண்டு 2025-ன் முதல் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், கரும்பு சாறு, இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சந்தன காப்பு அலங்காரங்களை செய்து மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலை, எலுமிச்சை மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர்.
Comments
Post a Comment