• பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்.
· தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை சின்னமலை நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் கூட்டுறவு பண்டக சாலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி (ம) சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
2025-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவை சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில், கூட்டுறவு, அமுதம் மற்றும் மகளிர் ஆகியவற்றின்கீழ் செயல்படும் 699 நியாய விலைக் கடைகளில் உள்ள 4,51,047 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 363 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4,51,410 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 4,32,393 நபர்களுக்கு இலவச சேலைகளும், 4,32,393 நபர்களுக்கு இலவச வேட்டிகளும் வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக 02.01.2025 முதல் 08.01.2025 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மூலம் ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 09.01.2025 முதல் 13.01.2025 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் எந்த சிரமமுன்றி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணைமேயர் மா.சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மண்டலக் குழுத் தலைவர்கள் நரேந்திரன், வெங்கடேசன், யூசுப்கான், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் இணைபதிவாளர் இராமதாஸ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர் மா.சந்தானம், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment