• வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி சமத்துவ பொங்கல்
·
வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி
மகளிர்
கல்லூரியில்
பம்பரம்,
பாண்டி
ஆட்டம்,
சிலம்பாட்டம்,
சுருள்
வாள்
உள்ளிட்டவைகளுடனும்,
ஆடல்,
பாடல், பாரம்பரிய கலை
நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
- மாணவிகள்
உற்சாகம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சாய்நாதபுரத்தில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் புதுப்பானையில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய பின்னர் பாரம்பரிய விளையாட்டுகளான உரியடி, ஒன்றாங்கல்லாட்டம், பாண்டி ஆட்டம், பம்பரம் விடுதல், ஊஞ்சலாட்டம் ஆகியவைகளுடன் மாணவிகள் உற்சாகமாக மதம், மொழி, இனம் பாகுபாடின்றி சமத்துவமாக பொங்கலை கொண்டாடினார்கள்.
மேலும் சிலம்பாட்டம், சுருள் வாள் உள்ளிட்ட வீர விளையாட்டுகள், கயிறு இழுத்தல் ஆகியவைகளுடன் பரதம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகம் பொங்க ஆயிரக்கணக்கான மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடினர்.
Comments
Post a Comment