• டாஸ்மாக் மதுபானகடைகள்விடுமுறை.

  • டாஸ்மாக் மதுபானகடைகள்விடுமுறை.

தமிழ்நாடு மாநில வாணிப ககத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 15.01.2025 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம், 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் என்பதாலும் மேற்குறிப்பிட்ட 2 நாட்களிலும் மதுபான கடைகளை மூடிவைக்க வண்டும்  என்று சென்னை ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அவர்களின் கடித எண் ம(ம) 2(1)/129/2017, நாள்: 07.01.2025-ல் உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே  மேற்படி தினங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் (FL1/FL2/FL3/FL3AA/FL4A and FL11)  அனைத்தும் மூடப்பட்டு ருக்க வேண்டும் என்றும் அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கோள்ளப்படும் என்றும்,தே  போல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.       

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.