• கொசவன்புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்.


 ·         வேலூர் மாவட்டத்தில் ஜனவரி-2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம்வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூர் கிராமத்தில் 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர்.

                 வேலூர் மாவட்டத்தில் ஜனவரி – 2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் வட்டம், பசுமாத்தூர் மதுரா, கொசவன்புதூர் கிராமத்தில் 29.01.2025 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரத்தினை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.  தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலதிட்ட உதவிகள் சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.  மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும்.  எனவே, மனுதாரர்கள் மனுவில் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.