• வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா

  • வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் திருவிழா - கோல போட்டியில் வெற்றி பெற்ற துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி பரிசு வழங்கினார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

            இந்த பொங்கல் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, , கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

            இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் கானா, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய வெளிநாட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர். இம்மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  தமிழர்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.  

                முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோல போட்டியில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நில அளவை பிரிவு, புள்ளியல் துறை, பொது சுகாதாரத்துறை, மாநில நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கருவூலம். சுகாதார துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த மகளிர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை கோலங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.

                இந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறைக்கு முதல் பரிசு ரூ.5,000/-க்கான காசோலையும், இரண்டாம் பரிசு பெற்ற பொது சுகாதார துறை ரூ.3000/-க்கான காசோலையம், மூன்றாம் பரிசு பெற்ற வருவாய் துறைக்கு ரூ.2000/-க்கான காசோலையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். அதனை தொடர்ந்து  கோல போட்டியில் பங்கேற்ற அனைத்து துறைகளுக்கும் ஆறுதல் பரிசு ரூ.1000/-க்கான காசோலை வழங்கினார்.

                மேலும் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் விவசாயத்தை குறிக்கும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் வெளிநாட்டு மாணவர்கள் பொங்கல் விழாவிற்கு அழைத்து வரப்பெற்றனர்.               

                இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.முத்தையன், சுற்றுலா துறை அலுவலர் இளமுருகன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.