• வேலூர் மாவட்ட முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள்.

  • வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின்கீழ் 12 கூட்டுறவு சங்கங்களும், 10 தனியார் தொழில் முனைவோர்களும் என மொத்தம் 22 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மான்யத் தொகையாக ரூ. 2 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்/ மருந்தாளுநர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மான்யமாக வழங்கப்படும். இதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும் 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC)  மூலமாக ஜெனரின் (Genaric Medicines) மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட கிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  Branded medicines, Surgical Items  முதலியவை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) மூலம் மாவட்ட கிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட கிடங்குகளிலிருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு அனைத்து வகையாக மருந்துகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட  ஆட்சித் தலைவர் ஒவ்வொரு முதல்வர் மருந்தகத்தில் மருந்தாளுநர்களிடம் மருந்தகத்திற்கு கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள மருந்துகளின் விவரங்கள் இதுநாள்வரை விற்பனை செய்யப்பட்டுள்ள மருந்து விவரங்கள், மருந்தகம் அமைந்துள்ள  இடத்தின் வாடகை விவரங்கள் மற்றும் பொதுமக்களிடையே மருந்தகத்தில் வரவேற்பு  ஆகிய விவரங்களை  கேட்டறிந்தார்.

மேலும் முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்க  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்.  எனவே முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  மருந்தாளுநர்கள் நடத்த வேண்டும்.

 முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்களின் தேவை அறிந்து மருந்து பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்திட மருந்தாளுநர்களுக்கு அறிவுறுத்திறனார். 24.02.2025 முதல் 02.03.2025 தேதி வரை 22 முதல்வர் மருந்தகங்கள் மூலம் 1411 நபர்களுக்கு ரூ.19300/- தள்ளுபடி விலையில் ரூ.94835/- மருந்து  பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நானும் ஒவ்வொரு மருந்தகத்தையும் நேரில் வந்து ஆய்வு செய்வேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகங்கள் விவரம்

வ.எண்.

வட்டாரத்தின்

பெயர்

கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் மருந்தகங்கள்

தனியார் மூலம் நடத்தப்படும் மருந்தகங்கள்

1

வேலூர்

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சத்துவாச்சாரி, 

1.வனஜா லோகநாதன், எண்.4, செல்லியம்மன் கோயில் தெரு, காகிதப்பட்டறை, வேலூர்.

2. முகமது உசாமா,

எண்.37, மசூதி குறுக்கு தெரு, கஸ்பா, வேலூர்.

3.லோகநாதன்,

எண்.331, ஆற்காடு சாலை, கம்மவான்பேட்டை கிராமம்,

வேலூர்

4.சுரேந்திரன்,

கடை எண்.02, பென்னாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகம், ஆரணி மெயின் ரோடு, வேலூர் வட்டம்,

வேலூர் மாவட்டம்.

2

காட்பாடி

பொன்னை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,

 

3

வேலூர்  மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை காட்பாடி,

 

4

கணியம்பாடி

கணியம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,

 

 

5

அணைக்கட்டு

வெட்டுவானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

 

6

ஒடுக்கத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

 

7

கீ.வ.குப்பம்

பசுமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

திவ்யாதர்ஷினி,

எண்.1/328, வேலம்பட்டு கேட்,  வேலம்பட்டு, கீ.வ.குப்பம்,

வேலூர் மாவட்டம்.

8

 

குடியாத்தம்

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை குடியாத்தம்

1. சுமதி,

எண்.எஸ்.02, பஜனை கோயில் தெரு, காக்குமடகு, மேல்மூட்டுகூர், குடியாத்தம் வட்டம்,

வேலூர் மாவட்டம்.

2.ஷீலா,

எண்.662, ஆதிதிராவிடர் காலனி, அகரம்சேரி, குடியாத்தம் வட்டம்,

வேலூர் மாவட்டம்.

3.ஸ்டாலின்,

எண்.80/82, சித்தூர் சாலை, குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம்.

4.பிரித்திமா,

எண்.63 சி, பலமநேர் சாலை, செங்குன்றம், குடியாத்தம் வட்டம்,

வேலூர் மாவட்டம்.

5.பிரித்திகா,

எண்.36, பஜனை கோயில் தெரு, ஐதர்புரம், ஓலகாசி, குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம்.

9

குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

10

 

பேர்ணாம்பட்டு

கொத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,

 

11

மொரசப்பல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

 

12

பேர்ணாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

 

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் சந்தானம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் முதல்வர் மருந்தக மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.