• வேலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் 36 வழித்தடங்களில் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள் குறித்து பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம்.
மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் 2024, G.O.Ms. No.33, Dated: 23.01.2025 பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் / குக்கிராமங்கள் / குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 36 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வேலூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடாக 13.02.2025 மற்றும் 22.02.2025 அன்று வெளியிடப்பட்ட 36 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் மினி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது
இக்கூட்டத்தில் 36 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரும்பும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், மினி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வரும் மார்ச் 7-ம் தேதிக்குள் வேலூர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment