• வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்.
· வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம் - அமைச்சர் துரைமுருகன் மரியாதை.
வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் 5-ம் ஆண்டு நினைவு தினம் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுசெயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேராசிரியர் அன்பழகன் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன், பகுதி செயலாளர்கள் தங்கதுரை, பாலமுரளிகிருஷ்ணா, முருகப்பெருமான், வக்கீல் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Comments
Post a Comment