• வேலூர் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

 ·        வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.

வேலூர், கணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு, கீ.வ.குப்பம், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.

            பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான  குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின் விளக்கு, சாலை வசதிகள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் DBC பணியாளர்களை கொண்டு தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.

                மேல்நிலை நிர்த்தேக்க தொட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரினேஷன் செய்வதை ஊராட்சி செயலர் கண்காணிக்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் அடித்தள நிலைக்கு கொண்டு வரப்பட்டது. ஆதிதிராவிடர் காலனியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தில் பயன்பெற மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

                அனைத்து கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குடிநீர் மற்றும் கழிப்பறையில் பைப்லைன் வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்த்தல் பணிகளை மேற்கொள்ளவும், புதிய கட்டிடங்களை கட்டவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                குடிநீர் வரி மற்றும் வரி ஊராட்சி செயலர்கள் சரியான முறையில் வசூல் செய்து உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                காட்டு நாயக்கர்/நரிக்குறவர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தெருவிளக்குகள் சரியான நேரத்தில் எரிவதையும், சரியான நேரத்தில் அணைவதையும் ஊராட்சி செயலர்கள் கண்காணிக்க வேண்டும்.

                அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளான பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, அல்லேரி ஆகிய மலைக் கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமங்களில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1000 வழங்குவது குறித்து படித்த மாணவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

                15 வது நிதிக்குழு மான்ய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பட்டியல் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பள்ளிகளின் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

                ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் செயல்படும் பணியாளர்களை கொண்டு தூய்மை படுத்த வேண்டும்.

                ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கும் பட்சத்தில் உடனடியாக தொகையினை விடுவிக்க வேண்டும். அரசு புறம்போக்கு இடம், ஏரி, குளம், குட்டை மற்றும் கால்வாய் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

                டெங்கு காய்ச்சல் பாதிக்காதவண்ணம் DBC பணியாளர்களை கொண்டு அனைத்து இடங்களிலும் தூய்மைப்படுத்தவும், அறிகுறிகள் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                தீண்டாமை இன்மை, போதை இன்மை, குப்பைகளற்ற ஊராட்சிகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் ஊராட்சிகள் போன்ற அனைத்து நிலையிலும் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளுக்கு சிறந்த ஊராட்சி விருது வழங்கப்படும். அரசு மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் வளர்ச்சி பணிகளையும் கிராமபுறங்களில் செயல்படுத்தி வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை  விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.