• காட்பாடி ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

  • காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளில் நடைபெற்று வரும்  பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் 15-வது மத்திய நிதி குழு மானியத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், பாராளுமன்ற  உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ல் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊரகப் பகுதிகளில் வீடுகளை பழுது பார்க்கும் பணி போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

2023-24ஆம் நிதி ஆண்டிற்கான 15-வதுத்திய நிதி குழு மானியத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

ஒருங்கிணைந்த குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். 2023-24-ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட சாலை பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

2024-25-ஆம் நிதியாண்டில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ஒப்பளிக்கப்பட்டு உள்ள பணிகளில் குடிநீர் பணிக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க உத்தரவிட்டு உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக பணிகளை தொடங்க அறிவுறுத்தினார். அடுத்த 3 மாதங்களுக்கு கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதம் 10 தேதிக்குள் முடித்து அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அடுத்த வாரத்தில் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து திட்ட பணிகளையும் வருகின்ற ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.