• வேலூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்.
·
நூறு நாள் வேலை
திட்டத்தில்
5 மாதங்களாக சம்பளம்
வழங்கப்படாததை
கண்டித்தும்
· நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த கோரியும்
· வேலூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ரோஸ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு உடனடியாக நூறு நாள் வேலைக்கான நிதியை வழங்கி 5 மாதங்களாக நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க கோரியும், கூலி பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டுமெனவும், நூறு நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த கோரியும் குறைந்த பட்ச கூலியாக ரூ.700 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லதா மற்றும் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Comments
Post a Comment