• வேலூர் மாவட்டத்தில் கொடி கம்பங்களை அகற்றுவது ஆலோசனை கூட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக நாளை (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

·        அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம் மற்றும் சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள்,  தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்துவது தொடர்பாக நாளை (02.04.2025)  மாலை 4.00 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள், அரசு அலுவலர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.