• மானியத் தொகையில் மாவு அரைக்கும் இயந்திரங்கள்.
· மானியத் தொகையில் மாவு அரைக்கும் இயந்திரங்கள்.
வேலூர் மாவட்டத்தில் வாழும் கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் (ம) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ளது.
இத்திட்டம் 2025-2026ம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5000/- மானியத் தொகையாக வழங்கப்படும் . இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான சான்றுகள்:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் கீழ்கண்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும் .
1. தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும் (பிறப்பிட சான்று).
2. 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
3. பிறந்த தேதிக்கான சான்று. அல்லது கல்விச்சான்று
4. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள் , ஆதரவற்ற பெண்கள் (அ) கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெற்று இருக்க வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.
5. ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 ஒரு இலட்சத்து இருபதாயிரம் மிகாமல் வருமான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்கள் 14.07.2025-க்குள் ‘B’ பிளாக், 4 வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment