• வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
· வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
· மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து ஐந்து தளங்களில் ஆய்வு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு தபால் மூலம் கடிதம் அனுப்பட்டுள்ளது. அது மொட்டை கடிதம் வந்தது. அதில் வெடிகுண்டு வெடிக்கும் என இருந்ததால் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதில் மெட்டல் டிடெக்கர், அக்னி என்ற மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் ஐந்து தளங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இது சோதனைக்கு பின்னர் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.
Comments
Post a Comment