• வேலூர் மாவட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.

·        வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

·        கொணவட்டம், அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில்04.07.2025   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாகக் கொண்டாட பெறும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது. அவ்வறிவிப்பினைச் செயற்படுத்துதல் தொடர்பில் அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 04.07.2025  வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 9.30 மணியளவில் கொணவட்டம், அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் தனித்தனியே நடத்தப்பெறவுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10000/-, இரண்டாம் பரிசாக ரூ.7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.  

          வேலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணாக்கர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பெற்றுள்ளன.

தலைப்புகள்

கட்டுரைப்போட்டி

பேச்சுப்போட்டி

1.                 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

2.       அன்னைத் தமிழே ஆட்சிமொழி

3.       தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர்

4.       அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு

5.       ஆட்சிமொழி விளக்கம்

6.       தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு

7.        ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு

8.       இக்காலத்தில் ஆட்சிமொழி

1.           ஆட்சிமொழி வரலாற்றில்                கீ. இராமலிங்கம்

2.   பன்மொழிப் புலவர்                               கா.அப்பாதுரையாரின்    தமிழ் ஆட்சிச்சொல் பணி

 

         போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களை மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் தொலைபேசி (எண் 0416 2256166) வாயிலாகவோ நேரிலோ அணுகலாம். இப்போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.