• திருநங்கைகள் அனைவருக்கும் கல்வி கட்டணம் அரசே ஏற்கும்.
· திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும்.
வேலூர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங்களையும் ”தமிழ்நாடு அரசே ஏற்கும்” என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வி பயிலும்போது அவர்களும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன் பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழநாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையினை தங்களது கல்லூரிகளில் சான்றாக சமர்ப்பித்து பயன் பெறலாம். மேலும் புதுமைப் பெண் (ம) தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன் பெறவிருக்கும் தகுதியான மாணவ, மாணவியர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment