• வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்.
· வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் மஞ்சுளா துவங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், நிர்வாகிகள் ஜோசப் அன்னய்யா, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவி உயர்வு வழங்கிவிட்டு காலியாக அனைத்து முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் வெளிப்படையான பொது மாறுதல்களை நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற முறைகேட்டை தடுக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவும், ஆசிரியர்களுக்கான பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை போல் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பிற துறை அலுவலர்கள் ஆசிரியர்களை கண்ணிய குறைவாக நடத்துவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்
Comments
Post a Comment