• வேலூர் மாவட்ட ஆட்சிமொழி கருத்தரங்கம்.
· வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் ஆட்சிமொழி கருத்தரங்கத்தில் பங்கேற்று பயன் பெற மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் ஆட்சிமொழி பயிலரங்கம் 07.08.2025, 08.08.2025 (பிற்பகல் 3.00 மணி முடிய) ஆகிய நாள்களிலும், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 08.08.2025 பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
பயிலரங்கத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலிருந்தும் வருகை தரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள், மொழிபயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்கள் இப்பயிலரங்கத்தில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment