• வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" .

·        வேலூர் மாவட்டத்தில்மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" என்ற நிகழ்வின் வாயிலாக மாவட்ட ஆட்சி தலைவர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" என்ற நிகழ்வின் வாயிலாக மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார்.

                இந்நிகழ்வில் ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 160 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஐயங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலின் போது மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் மூலம்  மாதம் ரூ.1000/- உதவி தொகைகளை வழங்கி வருகிறது.

மாணவர்கள் தங்கள் பயிலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகள் பாடங்களில் கவனத்துடன் பயின்றால் மத்திய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகள் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய சொத்து கல்வி ஒன்றுதான். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும். உங்கள் பள்ளி அருகே போதை இல்லாத பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் உயர்நிலை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்

            இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), ரமேஷ் (தனியார் பள்ளிகள்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.