• அறிவுத்தோட்டத்தில் மைக்ரோ கிரீன் பயிற்சி.


 ·         அறிவுத்தோட்டத்தில் மைக்ரோ கிரீன் பயிற்சி.

ஏன் மைக்ரோகிரீன்ஸ் (Microgreens) சாப்பிட வேண்டும்?

 முளைக்கட்டிய பயிறுக்கும் இந்த மைக்ரோ கிரீன்ஸுக்கும் என்ன வித்யாசம் ?

        தற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது ....

          மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

 மைக்ரோ கிரீன்ஸ் என்றால் என்ன?

     வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்து கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 

பலன் & என்னென்ன சத்துக்கள் உள்ளன?

     இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A, C, K நிறைந்துள்ளன. தவிர பாலிஃபீனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் மைக்ரோ கிரீனில் இருக்கிறது.

     100 கிராம் மைக்ரோகிரீனில் 15-20 கலோரிதான் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதுதான் இதற்கு காரணம்.

      வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் அளவு அதிகமாக இருக்கிறது.

 

முளைக்கட்டிய பயிறுக்கும் இந்த மைக்ரோ கிரீன்ஸும்க்கும் என்ன வித்தியாசம்?

     விதை முளைத்த இரண்டு நாள்களில், அதன் முளை வெளிவரும்போதே பயன்படுத்துவது முளைக்கட்டிய பயறு. இன்னும் சில நாள்கள் வைத்து அதன் முளை தண்டிலிருந்து இலை வெளியே வந்த சில நாட்களில் பயன்படுத்துவதுதான் மைக்ரோ கிரீன்ஸ்!

     இதன் முக்கியத்துவம் கருதியே அறிவுத்தோட்டத்தில் 03.08.2025 ஞாயிறு அன்று நடைபெறும் சந்திப்பில் மைக்ரோ கிரீன் குறித்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மைக்ரோகிரீன் தயாரிப்பது பற்றிய விளக்கங்கள் வழிமுறைகள் கயல்விழி அளிக்க இருக்கிறார்கள். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.

     பதிவு செய்ய 9443032436 எண்ணில் உங்கள் பெயர் மொபைல் எண் தெரிவிக்கவும்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.