• வேலூர் இளைஞரை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.


 ·         வேலூர் அருகே இளைஞரை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு.

     வேலூர் மாவட்டம், ஓங்கப்பாடியைச் சேர்ந்தவர் பாபு. இவரது 3-வது மகன் கவுதம் (வயது 23). பட்டதாரி. இவர் வேலை தேடி வந்தார். இவரது அத்தை மகள் நிரோஷா. அவரது கணவர் கார்த்தி (36). போதைக்கு அடிமையான கார்த்தி அடிக்கடி நிரோஷாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவுதம் அவ்வப்போது தட்டி கேட்டு வந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

                இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதி போதையில் கத்தியுடன் வந்த கார்த்தி, கவுதம் எங்கே என அவரது வீட்டில் தேடி உள்ளார். அங்கு அவர் இல்லை என்றதும் கத்தியுடன் வெளியே சென்ற அவர் எதிரே பைக்கில் வந்த கவுதமை மறித்து நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

                இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி முன் இறுதி விசாரணை நடந்தது. அதில் கார்த்திக் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் கார்த்தியை வேலூர்  ஜெயிலில் அடைத்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.