• வேலூரில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு.

·        வேலூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறவுள்ள திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

            கன்னியாகுமரி மாவட்டத்தில் 31.12.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் என்று அறிவித்தார்.

                அதற்கிணங்க, வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அறிவிக்கப்பட்ட கண்காணிப்பு குழு வாயிலாக திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள், திருக்குறள் ஆர்வலர்கள் கொண்ட 3 குழுக்கள் வாயிலாக வேலூர் மாவட்டத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளி, பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, குடியேற்றம் தங்கம் நகர் சாதனை கல்வி மையம் ஆகிய இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு வாரத்தில் அரை நாள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொடர்பு எண்.0416–2256166) அணுகலாம். எனவே  மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என விருப்பமுள்ள அனைவரும் இந்த திருக்குறள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட  ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.