• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரர் குரு பூஜை.
· வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரர் குரு பூஜை.
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் சுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து பின்னர் சிவனடியார்கள் தேவார, திருவாசக பாடல்களை பாட மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதிய குதிரை வாகனத்தில் சேரமான் நாயனாரை வைத்தும், சுந்தரரை யானை வாகனத்தில் வைத்தும் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களை செய்து திருவிளக்குகளை ஏற்றி வழிபாட்டனர்.
Comments
Post a Comment