• வேலூர் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு.

·        தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வேலூர்,  காட்பாடி மற்றும் குடியாத்தம்  சட்டமன்ற தொகுதிகளில்   தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாக்காளர் உறுதிமொழி எடுத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சி, சாய்நாதபுரம் டி.கே.எம். கல்லூரி சாலையில் 1000 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் எடுத்துரைத்து, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை எடுத்து கொண்டனர். மேலும் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு   பரிசு வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து காட்பாடி சட்டமன்ற தொகுதி காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி. தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் போன்றவை கடைபிடிக்கப்பட்டது. அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மிர்தாரிக்அலி முன்னிலையில் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகில் தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறை பணியாளர்கள் என சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து  மாவட்ட தேர்தல் அலுவலர் எடுத்துரைத்து, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார். பின்னர்  அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.செந்தில்குமார், காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிமாறன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி சுபலட்சுமி, வேலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, காட்பாடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தர், குடியாத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தேர்தல் திருவிழாதமிழ்நாட்டின் பெருவிழா.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.