• அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு.
· · அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி, அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி) பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் காட்சிப் புலவியல் துறை இணைந்து நடத்திய ‘100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்வு’ அக்சிலியம் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட அலுவலர் மாறன், தேர்தல் அலுவலர், மண்டல துனை வட்டசெயலர் பொன்முருகன் தலைமை தாங்கி ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு வலியுறுத்தினார்.
கல்லூரிச் செயலர் அருட்சகோதரி முனைவர் அ.மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் அ.ஆரோக்கிய ஜெயசீலி, துணைமுதல்வர் அருட்சகோதரி முனைவர் அ.அமலவளர்மதி வாழ்த்துரை வழங்கி வாக்குப்பதிவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வினை வரலாற்றுத் துறைத்தலைவர் அருட்சகோதரி முனைவர் மு.சுமதி, காட்சிப் புலவியல் துறைத் தலைவர் அருட்சகோதரி திமினாசெலின் இவர்களோடு பேராசிரியர்களும் இணைந்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்தனர்.
இந்நிகழ்வில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்!, இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்! என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விழிப்புணர்வு நிகழ்வு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பற்றிய பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.

Comments
Post a Comment