• காட்பாடி ரெட் கிராஸ் 100% வாக்கு விழிப்புணர்வு பேரணி.

·        காட்பாடி ரெட் கிராஸ், கல்வி நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து காட்பாடியில் 100% வாக்கு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

        இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 23.04.2026- ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியானது இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், ஆர்.ஐ.சி.டி. கல்வி நிறுவனம் வேலூர் மாவட்ட இந்திய தேர்தல் ஆணையத்துடன்  இணைந்து பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் மற்றும் காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் சி.மாறன் அவர்கள் துவக்கி வைத்து பேசினார்.

    உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.பாலசந்தர் முன்னிலை வகிததார்.  வேலூர் டி.கே.எம். கல்யாண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்டு சில்க் மில் சந்திப்பு காங்கயநல்லூர் சாலை வழியாக மீண்டும் கல்யாண மண்டபம் அருகில் நிறைவு பெற்றது.

   காட்பாடி ரெட் கிராஸ் சங்க அவைதலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஆர்..சி.டி கல்வி நிறுவன இயக்குனர் கே. எஸ்.அசரப் வரவேற்று பேசினார். 

     துணை வட்டாசியர் முருகன், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஸ்ரீனிவாசன், காட்பாடி கிளை அவை துணைதலைவர் ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் டாக்டர்.வி.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், தணிகை ஜி.செல்வம், ஜெ.குமரவேல், திருமகள் செல்வமணி, ஞானவேல், சோமசுந்தரம் கல்வி நிறுவன ஆசிரியர்கள் ரீட்டா, என்.பிரசாந்த், ராஜசிம்மன், ஆனந்தகுமார் ஆர்..சி.டி பாரா-மெடிக்கல் கல்வி நிறுவன கல்லூரி மாணவர்கள்  பங்கேற்றனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.