• வேலூர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் ஆட்சித்தலைவர் ஆய்வு.

 ·        வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 தொடங்கியது. மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) பொதுத் தேர்வு 03.03.2026 (செவ்வாய்கிழமை) அன்று  தொடங்கப்படவுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு 11.03.2026 (புதன்கிழமை) அன்று  தொடங்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சி தலைவரின் மேற்பார்வையில் வருவாய் துறை அலுவலர்கள் 22 பேரும், பள்ளிக்கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)  அவர்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும், வேலூர் தலைமையில் 6 பறக்கும் படையும் பொதுத்தேர்வை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டிற்கு 82 தேர்வு மையங்களும், 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 2 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் மற்றும் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் செயல்பட உள்ளது. மேல்நிலை இரண்டாமாண்டில் 7,134 மாணவர்களும், 8,522 மாணவிகளும் மொத்தம் 15985 மாணவ /மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.

மேல்நிலை முதலாமாண்டில்(Arrear) 349 மாணவர்களும், 179 மாணவிகளும் மொத்தம் 528 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.

தே போல் 11.03.2026 அன்று தொடங்கப்படும் பத்தாம் வகுப்ப தேர்விற்கு 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள். 2 விடைத்தாள் சேகரிப்பு மையம், 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் மற்றும் 103 தேர்வு மையங்களாக செயல்படவுள்ளது. இம்மையங்களின் 9,114 மாணவர்களும், 9,297 மாணவிகளும் மொத்தம் 18,411 மாணவ,  மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டிற்கு 82 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 88 துறை அலுவலர்களும், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், 20 வழித்தட அலுவலர்களும், தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 102 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் சுமார் 1127 ஆசிரியர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 227 சொல்வதை எழுதுபவர்களாக தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா உடனிருந்தார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.