• வேலூர் சதுப்பேரி ஏரி – ரூ.19 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத் தலம்

·        வேலூர் சதுப்பேரி ஏரி – ரூ.19 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத் தலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், ரூ.19 கோடி மதிப்பில்  புனரமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரி ஏரியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பின்னர் படகில் சென்று ஏரியின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீவு திட்டினை பார்வையிட்டனர். 

வேலூர் சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத்தப்பட்டுள்ள  பணி விவரம்.

   ரூ.19.00  கோடி மதிப்பீட்டில் சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத்தும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத்தும் பணியினை 13.03.2025 அன்று தொடங்கப்பட்டது.

சதுப்பேரி ஏரி கரைகளை பலப்படுத்தி கரையின் மேல்பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் 1.20 கி.மீ நீளத்திற்கு டைல்ஸ் பதித்து மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சதுப்பேரி ஏரியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியில் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டு ஏரிகளை சுற்றி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாவண்ணம் கம்பி வேலியுடன் கூடிய  (Grill fencing) பாதுகாப்பு சுற்றுச்சுவர் 1.20 கி.மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில்  பார்வை தளங்கள் 2 அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியில் படகு சவாரி செய்யும் வகையில் ஏரியில் 1 படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.  ஏரியின் இயற்கை அழகை வளப்படுத்தி பறவையினங்களை ஈர்க்க  ஏதுவாக ஏரியின் மத்தியில் செடிகள் நடப்பட்ட செயற்கை தீவு திட்டுகள் 2 அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியினை பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் சென்று வர ஏதுவாக சுமார் 2.00 கி.மீக்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி மேற்கொள்ளப்பட்டதால், வேலூர் மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும், சமூக மையமாகவும் விளங்கும், மேலும் நமது சமூக ஆரோக்கியத்தையும், இப்பகுதியின் சுற்று சூழலை மேம்படுத்தும்,  மேலும் இப்பகுதியில் குடிநீர், நிலத்தடி நீர் வளமும் மேம்படுத்தப்படுகிறது.

தற்பொழுது 100% பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன்,   மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுஜாதா (சதுப்பேரி), சி.நிவேதிதா (கருகம்பத்தூர்), நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பவழக்கண்ணன், செயற்பொறியாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.