• வேலூர் சார்நிலை கருவூலம் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டடம்
· வேலூர் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலம் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டடம் - மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.
வேலூர், வேலப்பாடியில் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சார்நிலைக் கருவூலம் கட்டடத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் திறந்து வைத்தனர்.
தரைதளம் வரவேற்பு அறை, காப்பாறை (Strong Room), உதவி கருவூல அலுவலர் அறை, பாதுகாவலர் அறை, மாற்று திறனாளிகள் கழிப்பறை, பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும்,
முதல்தளம் சார்கருவூல அலுவலர் அறை, சார்கருவூல அலுவலகம், பதிவறை, ஓய்வூதியர்கள் பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் அலுவலர்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும்,
இரண்டாம் தளம் மண்டல இணை இயக்குநர் அறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகம், பெண்கள் மற்றும் ஆண்கள் அலுவலர்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும்,
மூன்றாம் தளம் கூட்டரங்கம், பதிவறை, அலுவலர்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும், மின்தூக்கி, சாய்வுத்தளம், சம்ப் மற்றும் சுற்றுச்சுவர் வசதிகளுடன் மொத்தம் 691 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, மண்டல இணை இயக்குநர் (கருவூலத்துறை) உஷா, மாவட்ட கருவூல அலுவலர் நாகராஜன், கூடுதல் கருவூல அலுவலர் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment