• வேலூர் ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூடம்
· வேலூர் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூடம் - மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.37,50,000/- மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் திறந்து வைத்தனர். பின்னர் 40 நபர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் என மொத்தம் ரூ.8,00,000/- மதிப்பில் திருமண நிதியுதவி தொகையினை வழங்கினார்கள்.
2025-2026-ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் ”கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம், வேலூர் பழைய பேரூந்து நிலையத்தில் 30X10X10 என்ற பரப்பளவில் ரூ.37,50,000/- மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ”உழைப்பாளர் நலக்கூடம் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர் முருகன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் டி.ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment