• இறைவன்காடு பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் தரைமட்ட அணை.

 ·        இறைவன்காடு பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் தரைமட்ட அணை.

·        இறைவன்காடு கிராமம் மற்றும் கவசம்பட்டு கிராமம் இடையே பாலாற்றின் குறுக்கே    ரூ.52.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட அணையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமம் மற்றும் கீ.வ.குப்பம் வட்டம், கவசம்பட்டு கிராமம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட அணையை இறைவன்காடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தனர். 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தரைமட்ட அணை  விவரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே படுகை அணை அமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ.52.98 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.   

பணியினை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் 15.07.2024 அன்று அடிக்கல்   நாட்டப்பட்டு பணி  தொடங்கி வைக்கப்பட்டது.

படுகை அணையானது 655 மீட்டர் நீளமும், 0.60 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. படுகை அணையில் 20.87 மி.க.அடி நீர் தேக்கிவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படுகை அணையிலிருந்து வினாடிக்கு 90586 க.அடி தண்ணீர் வெளியேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படுகை அணை அமைக்கப்பட்டதின் மூலம் கவசம்பட்டு முதல் திருமணி வரை செல்லும் கொட்டாற்றில் நீர் எளிதில் சென்றடைவது உறுதிபடுத்தப்படுகிறது.

இப்படுகை அணை அமைப்பட்டதின் மூலம் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு பாலாற்றின் இருபுறங்களிலும் உள்ள 12 கிராமங்கள் பயன்பெறுகிறது. 12 உரைகிணறுகள் மற்றும் 626 கிணறுகள் மூலம் 1379.49 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்படுகை அணை அமைக்கப்பட்டதின் மூலம் இறைவன்காடு, விரிஞ்சிபுரம், வடவிரிஞ்சிபுரம், மேலூர், கீழுர், பிலாஞ்சிப்பட்டு, முடினாம்பட்டு, சோழமூர், வாழ்வாங்குன்றம், கொத்தமங்கலம் மற்றும் திருமணி ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன.

இப்படுகை அணை அமைக்கப்பட்டதின் மூலம் சுமார் 7642 விவசாயிகள் நேரடியாகவும் மற்றும் சுமார் 75000 நபர்கள் மறைமுகமாகவும் பயனடைவர்.  தற்போது  100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நீர்வள துறை கண்காணிப்பு பொறியாளர் பவழக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சுதாசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள்  கலைச்செல்வி (இறைவன்காடு), க.ஜம்புலிங்கம் (கவசம்பட்டு), செயற்பொறியாளர் வெங்கடேஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.