• காட்பாடி சட்டமன்றத் தொகுதி நல திட்ட உதவிகள்.


 ·        காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை திறந்து வைத்து,  98 பயனாளிகளுக்கு ரூ. 2.69 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ.2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பள்ளிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் வழங்கினர்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர், வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1, காட்பாடி தாராபடவேடு  பகுதியில்  காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்-ன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடி முத்தமிழ் நகரில் ரூ.11 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழற்குடை, பவானி நகரில் ரூ.6.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.12.75 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடம், பள்ளிக்குப்பம் பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தில்  ரூ.1.25 கோடி மதிப்பில் புணரமைத்து மறு சீரமைக்கப்பட்டுள்ள குளம் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்  நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்-ன் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ்  ரூ10 இலட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பள்ளிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு ரூ.2,62,92,323/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ. 4,82,400/- மதிப்பிலான பல்வேறு உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 93,100/-   மதிப்பிலான உபகரணங்கள் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூபாய் 2,68,67,823/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா. சுனில் குமார், ஆணையாளர் இரா.லெட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், 1 வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வே.வேல்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் மல்லிகா சீனிவாசன்,  டிட்டா சரவணன்,  ரஜினி, மாநகர நல அலுவலர் மரு. பிரதாப் குமார், வட்டாட்சியர் திரு. பாலசந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.