• காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகளுக்கு பாராட்டு.


 ·         காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகளுக்கு கோட்டாட்சியர்  .செந்தில்குமார் பாராட்டு.

             வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு குழு கூட்டம் கிளை அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வேலூர் வருவாய் கோட்டாட்சியரும் காட்பாடி ரெட்கிராஸ் தலைவருமான .செந்தில்குமார் சந்தித்து பாராட்டு பெற்றனர்.

    முன்னதாக துணைதலைவர் மற்றும் மத்திய அரசின் சட்ட அமலாக்க துறையின் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியாக செயலாற்றி தேர்தலை நடத்தினர்.

            பின்வரும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்ததெடுக்கப்பட்டனர்.

   பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினர்களின் முதலாவது குழு கூட்டம் நடைபெற்றது. பின்வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர். அவைதலைவராக செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக வி.பழனி, துணைதலைவராக ஆர்.விஜயகுமாரி, எஸ்.எஸ்.சிவவடிவு செயலாளராகவும், வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் நியமன துணைதலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள். எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், அருள்சுடர், ஞானவேல் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தித்து பேசினர். புதிய நிர்வாகிகள் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர். ஆண்டு பொதுக்குழு கூட்ட அறிக்கையின் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வழங்கினார்.

வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் பாராட்டு

    புதியதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சங்கத்தின் பதவி வழி தலைவர் .செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது

         புதிய நிர்வாகளை பாராட்டுகின்றேன்சேவை செய்வதில் நம் மாவட்டத்தில் காட்பாடி கிளை சிறப்பாக செயல்பட்டதற்காக மகிழ்ச்சியடைகின்றேன்நாம் தொடர்ந்து சேவைகளை தொடர வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.