• அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம்.

  • தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றியமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றியமைக்கப்பட்ட  வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான  ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்கள், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடி மையங்கள், கீ.வ.குப்பம்  சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடி மையங்கள், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 319 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,427 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு  துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க  இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 1427 வாக்குச்சாவடி மையங்களிலும் 1200-க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளதால் துணை வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கும் நிலை தற்பொது இல்லை.

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில்  பாகம் எண்கள் 198,202 மற்றும் 289 ஆகிய 3 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின்  விவரங்கள்   மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த இடமாற்றம் செய்யப்பட்ட 3 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்த இடநெருக்கடி, உள்ளுரில் நிலவும் காரணங்களால் அருகாமையில் உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன்,  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி / வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி / குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி,  காட்பாடி சட்டமன்ற தொகுதி / தனித்துணை ஆட்சியர் (.பா.தி) மாறன், கீ..குப்பம் சட்டமன்ற தொகுதி / மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி / உதவி ஆணையர் (கலால்) பிரகாஷ், தேர்தல் வட்டாட்சியர்  ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.