• அணைக்கட்டு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு


·        அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு அரசு மருத்துவமனை  வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை  திறந்து வைத்தனர்.

அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் விவரம்

                இம்மருத்துவமனை கட்டடம் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவ உபகரணங்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், இருக்கைகள் உள்ளிட்ட தளவாடங்கள் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.

                இம்மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளமாக கட்டப்பட்டுள்ளது. தரைதளம் விபத்து பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு (24 படுக்கைகள்), அவசர சிகிச்சை பிரிவு, பிறந்த குழந்தை பராமரிப்பு மையம், மகப்பேறு வார்டு, அல்ட்ராசவுண்ட், காத்திருப்பு பகுதி ற்றும் பொது கழிப்பறை போன்ற வசதிகளுடன் 1459 சதுர மீட்டர் பரப்பளவிலும்,

                முதல்தளம் அறுவை சிகிச்சை அரங்குகள் 1 & 2, மீட்புப் பிரிவு, நோயாளிகளுக்கான தயாரிப்புப் பிரிவு, துணி சேமிப்பறை, தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (5 படுக்கைகள்), பணி செவிலியர், பணி மருத்துவர், பொதுப் பிரிவு (18 படுக்கைகள்), தீவிர சிகிச்சைப் பிரிவு (10 படுக்கைகள்), செவிலியர் பணி நிலையம், பரிசோதனை அறை, பணியாளர் மற்றும் பொதுக் கழிப்பறைகள் போன்ற வசதிகளுடன் 1497 சதுர மீட்டர் பரப்பளவிலும்,  தலைமை அறை மற்றும் மின்தூக்கி அறை 56 சதுர மீட்டர் பரப்பளவிலும்,  மின்தூக்கி, டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகளுடன் மொத்தம் 3128 சதுர மீட்டர் பரப்பளவில்  கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், ஒன்றிய குழு துணைதலைவர் சித்ராகுமரபாண்டியன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அருள், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்  கிருஷ்ணமேனன்,  ராகபிரியா சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் சோபனா சபரிநாதன், அணைக்கட்டு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி சாரதி,   அணைக்கட்டு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மரு.சிங்காரவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.