• திங்கள் தின குறை தீர்வு முகாம்கள் நடைபெறாது.

·        தமிழ்நாடு சட்டமன்ற   பொதுத்தேர்தல் 2026  தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை திங்கள் தின குறை தீர்வு நாள் (GDP) முகாம்கள் மற்றும் இதர  கூட்டங்கள் நடைபெறாது - வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

      இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நடத்தை விதிகள் 15.03.2026 முதல் அமலுக்கு வருவதால், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மற்றும் மனு நீதி நாள் முகாம்கள், இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம், மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மற்றும் ஏனைய அரசு தொடர்புடைய மனுக்கள் பெறும் நிகழ்வுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளும்வரை நடைபெறாது எனவும், இந்திய தேர்தல் ஆணையத்தால் மறு அறிவிப்பு வரப்பெற்றவுடன் வழக்கம் போல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனைத்து அரசு தொடர்புடைய கூட்டங்கள் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.