• தமிழகத்தில் கேஸ் தட்டுபாடு.
· தமிழகத்தில் கேஸ் தட்டுபாடு நிலவுமானால் இரண்டு நாளில் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மூடப்படும் · வாடிக்கையாளர்கள் எங்களின் சிரமத்தை ஏற்று ஒத்துழைக்குமாறு தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கேஸ் சிலிண்டர் தட்டுபாடு ஓட்டல்களுக்கு மிகப்பெரிய பிரச்சணையை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்கள் மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் இருக்கும். படிப்படியாக ஓட்டல்களை மூடும் சூழ்நிலை ஏற்படும் .
இதை பொறுத்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் வீட்டு உபயோக சிலிண்டரை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். மாணவர்கள், தொழிலாளர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவார்கள். மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்.
மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ஓட்டல்களில் 50 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அனைவரும் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். ஒரு லட்சம் ஓட்டல்கள் மூடப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே போர்கால அடிப்படையில் ஓட்டல்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு நீண்ட நாள் வேண்டுகோளாக வெளியிலிருந்து ஓட்டல்கள் மின்சாரம் வாங்கும் அனுமதியை கொடுக்க வேண்டும். மேலும் கேஸ் சிலிண்டர் தட்டுபாட்டால் மின் அடுப்புகள் பயன்படுத்தும்போது அதற்கு மாநில அரசு அபராதம் விதிக்க கூடாது. இதனை தொழிலாக அங்கிகரித்துள்ளீர்கள். ஆனால் பயன்களை அளிக்கவில்லை. தொழில் துறை கட்டணத்திலேயே ஓட்டல்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு மாணியம் வழங்கி ஓட்டல்களுக்கு அனுமதி அளித்தால் அதனை பயன்படுத்தி சமைப்போம். உணவகங்களின் இயங்கும் நேரத்தை குறைக்கவுள்ளோம். மேலும் உணவு வகைகள் குறைத்து அத்தியாவசிய உணவுகளை அளிப்பது எனவும் இந்த நிலை தொடர்ந்தால் உணவகங்களை மூடுவதை தவிர வேறுவழியில்லை எனவும் வாடிக்கையாளர்கள் எங்கள் நிலையை அறிந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூறினார்.

Comments
Post a Comment