• தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம்.
· தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் விவரம், வாக்குச்சாவடி மையங்களின் விவரம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் விவரங்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை விவரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விவரங்கள் தேர்தல் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பொது இடங்கள், தனியார் இடங்களில் இருந்த அரசியல் சார்ந்த சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்ட விவரங்கள், செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்த விவரம், மாற்றத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
காவல் துறையின் சார்பில் தேர்தல் தொடர்பாக மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றபட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், சாய்தள வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி ஆகியவை இருப்பதை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்யவேண்டுமெனவும், கடந்த கால தேர்தல் வாக்குப்பதிவு சதவீத அடிப்படையில் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ள பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வுகளை அதிகளவு மேற்கொள்ளவும் தேர்தல் பொது பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் இறுதி செய்யவும், அண்டை மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் தேர்தல் காவல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக வாகன தணிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் சோதனையின்போது பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் இதர பொருட்களுக்கு பொதுமக்கள் உரிய ஆவணங்களை வழங்கும்பொழுது அதனை திரும்ப ஒப்படைக்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் காட்பாடி மற்றும் கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீமன்சுக்லா, வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் யுகல்கிஷோர்பண்ட், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மிர்தாரிக்அலி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சந்தீப்குமார், வேலூர் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் காவல் பார்வையாளர் டாக்டர் கவுஸ்தூப் ஷர்மா, காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அஷ்வின் டி கவுடா, வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அட்டேஷாம் அன்சாரி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன்லால்ஜட், கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் பிரதீப்குமார் சிங் செங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment